Tuesday, August 2, 2011

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய துறை ஆரம்பம்


 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுடன் புவியியல் துறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் ஒரு புதிய
துறையாக புவியியல் துறை அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன்
ஆரம்பமாகியுள்ளது.

இப்புதிய துறையின்  உருவாக்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் விசேட கலை கலாச்சார பீடத்தின் வளர்ச்சிக்கும் பிரதான ஒரு மைல் கல்லாகும் என பீடாதிபதி எஸ்.எம்.ஆலிப் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்  விரைவில் பொருளியல், புள்ளிவிபரவியல் துறை மற்றும் அரசியல் விஞ்ஞானத்துறைகள் உருவாகுவதற்கும் முயற்சிகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இதுவரை காலமும் இரண்டு துறைகளுடன் இயங்கி வந்த கலைப்பீடமானது எதிர்வரும் காலங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட  துறைகளுடன் இயங்குவதற்கு தான் பல முயற்சிகள்  எடுத்தது வருவதாகவும் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல துறைகளை  இயக்குவதன் மூலம் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தியும் பல்கலைக்கழகத்தில்
இருந்து வெளியேறும் பட்டதாரிகள் உடனடியாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்
கலைப் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.