Saturday, July 7, 2012

இலங்கையில் கல்வித்துறையில் பின்னடைவு எற்பட்டுள்ளது; பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம்


 உதயன்

news
10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று கல்வித்துறையில் காணப்படும் பின்னடைவுகளை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 
 
அதனடிப்படையில் கடந்த 4ம் திகதி தாம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பானது அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் விடப்போவதில்லை என சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி தெரிவித்துள்ளார்.  
 
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இருப்பினும் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இரண்டாம் கட்டமாக  பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளனர். 
 
எனினும் இதற்கு முன்னரும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர். எனினும் அரசின் வாக்குறுதிகளால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
அதன் பின்னரும் அவர்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை இதனையடுத்து அவர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நேற்று முன்தினம் முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment