இலவச கல்வியை இல்லாது ஒழிப்பதா? ஆசியாவின் ஆச்சரியம் ; யாழ்,பல்கலை மாணவர்கள் கேள்வி
UTHAYAN
UTHAYAN
ஆசியாவின் ஆச்சரியம் என்பது இலவச கல்வியை இல்லாமல் செய்வதா என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதுடன் கல்வி செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் அதன் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பல்கலைக்கழக கல்வியில் அரசியல்
தலையீடு எதற்கு, எங்களின் வளமான கல்வியே நாளைய சிறந்த சமுதாயத்தை
உருவாக்கும்,இசட் புள்ளி குழறுபடிக்கு தீர்வு வழங்கிக்கி பல்கலை அனுமதியை
உடன் வழங்கு,
மகிந்த சிந்தனை என்பது இலவசக் கல்வியை இல்லாதொழிப்பதா?, வரவு செலவுத் திட்டத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கு,
போன்ற பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்கள் எழுப்பியவாறும் மாணவர்கள் பல்கலைக்கழக வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எனினும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற சிறிய நேரத்தில் அப்பகுதிக்கு இராணுவ புலனாய்வுத் துறையினரும்,சிறீலங்கா காவல் துறையினரும் வந்தடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக மாணவர்களை உள்ளே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தான் எனினும் மாணவர்கள் அவரது கருத்துக்கு செவிசாய்க்காமல் தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

No comments:
Post a Comment