Friday, December 7, 2012

விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்
news
இரண்டாம் இணைப்பு, onlineuthayan
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழ நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழ விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், யாழ்.பலர்கலைக்கழ ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

'பல்கலைக்கழகம் என்ன கோமாளிகளின் கூடமா?', மாணவர்கள் சிறையில் நிர்வாகம் விடுமுறையில்' போன்ற சுலோக அட்iடைகளைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் தாங்கியிருந்தனர்.

பல்கலைக்கழக சூழலில் கடந்த நவம்பர் 27,28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற விரும்பத்தகாத வன்முறைகளையும், ஆயுத அடக்கு முறையையும் வன்மையாகக் கண்டித்த விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம், அப்பாவி மாணவர்கள் மீது திட்டமிட்டுப் பழிகள் சுமத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

மாணவர்களுக்குத் தொடர்பில்லாத வகையில் வளாகத்துக்கு அண்மித்து அமைக்கப்பட்டிருந்த சிறீ ரெலோ இயக்கக காரியாலயம் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாகடக்குதலைக் காரணம் காட்டி, எந்த விதமான ஆதாரமும் அற்ற முறையில் மாணவர்களை; கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் வெள்ளைத்துண்டில் 10 மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்து அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருக்கின்றனர்.

இத்தகையதொரு அறிவித்தல் கிடைத்ததும், மாணவர்களை ஒப்படைப்பதலிலை என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 5 மாணவர்களும், வணிக முகாமைத்துவ பீட மாணவன் ஒருவனும் நிர்வாகத்தினரால் நேற்று யாழ். பொலீஸாரிடம் ஒப்படைக்கப்படடிருக்கின்றனர்.

ஏற்கனவே மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களை இன்று விடுகிறோம், நாளை விடுகிறோம் என்று சாட்டுப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் ஏனைய மாணவர்களையும் நிருவாகம் கையளிக்கத்துடித்துக் கொண்டு நிற்பது கண்டிக்கத்தக்கதொன்றாகும் என்று விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இத்தகைய சம்பவங்களைக் கண்டித்தும், எதிர்காலத்தில் மாணவர்களின் கைதுகளைத் தடுக்கக் கோரியுமே இன்றைய போராட்ம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

போராட்டத்தின் முடிவில் இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு சம்பவத்தைக் கொண்டுவரும் முயற்சியாக மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இன நல்லிணக்கம் என்ற சொல் இத்தகைய நடவடிக்கைகளால் குழம்பிப் போகும் அபாயமிருப்பதாக குறிப்பிடும் அந்த மகஜரில் பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரிடமிருந்தும் கையெழுத்துப் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
11.00 am
கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்  கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகங்கள் கோமாளிகளின் கூடாரங்களல்ல, மாணவர்கள் சிறையில் நிர்வானகமே அக்கறை காட்டு, மாணவர்களை அச்சுறுத்தாதே கற்றலைக்குழப்பாதே, மாணவர்கள் சிறையில் நிர்வாகமே விடுமுறையில் போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





No comments:

Post a Comment