யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம்! இளையவர்களின் ஜனநாயக சிந்தனையை ஒடுக்கும் செயல்
OnlineUthayan
இவ்வாறான செயல்கள் மூலம்
எதிர்காலத்திலும், இளைய சமூதாயத்தின் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது
என்பதை வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது
OnlineUthayan

யாழ்.பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானத் மற்றும் ஏனைய மாணவர்களின்
கைதானது இளைய முதாயத்தின் ஜனநாயக சிந்தனையை ஒடுக்கும் செயல் என்றும் இதனை
வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தமிசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர்
அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
எமது வாழ்வியல் இருப் புக்கான
கருத்துரிமைச் சுதந்திரம் அடியோடு நசுக் கப்படுகின்றது. ஜனநாயக நாடு எனும்
பெயர் கொண்ட நிர்வாகத்தில் அராஜக ஆட்சியே கோலோச்சுகின்றது.
வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ
மேலாதிக்கத்தை சிவில் நிர்வாக அலகில் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு
அவர்களுக்கு அவ்வப்போது புலிக்கொடி ஏற்றல்களையும் இயல்பு நிலை
பாதிப்புக்கேற்ற செயல்களை அரங்கேற்ற வேண்டியது இன்றைய சர்வதேச
நெருக்கடிகளைச் சமாளிக்கும் தந்திரோபாய யுக்தியாகும்.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான
தாக்குதலும், கைதுகளும், தமிழ் மக்களின் மனங்களில் மேலும் மேலும் காயங்களை
ஏற்படுத்துகின்றதாகவே அமைந்துள்ளது.
இளைய சமுதாயத்தின் தேசிய ஜனநாயகப்
பண்புகளை மதிக்கின்றதாகவே அமைய வேண்டும். மாறாக மிதிக்கின்ற செயல்கள் அரசை
அவமதிக்கின்ற தாகவே அமையும்.
மிக நீண்ட காலமாகவே இலங்கை அரசு
தமிழர்களின் விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை நிவர்த்தி செய்ய
மறந்துபோவதனாலேயே மீண்டும், மீண்டும் தமிழர்களை வன்முறையாளராக்கி அடக்கி
ஒடுக்குகின்றனர்.
No comments:
Post a Comment